தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல வித்தைகளை கையாண்டு திறைமைகளை வளர்த்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பே கார் ரெஸர் வெறியர் என்றே கூறலாம்.
இந்நிலையில் தற்போது அது குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த வார இறுதியில் கோயம்பத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அஜித் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பயிற்சி மேற்கொண்டாராம். அஜித் நீண்ட வருடங்களுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள போவதால் அவரது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.