கமலுக்கு பிக்பாஸ் ஸ்ருதிக்கு 'ஹலோ சகோ'

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (10:29 IST)
நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து அவரது மகள் ஸ்ருதிஹாசனும் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அவரது மகள்  ஸ்ருதிஹாசன் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோவை சன்  டிவி வெளியிட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
தற்போது இந்தி படமொன்றில் மட்டுமே நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து தமிழில் ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே விஷால், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள நிலையில்  தற்போது ஸ்ருதிஹாசனும் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்