சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:18 IST)
சன் டிவியில் நடிகர் விஷால் தொகுத்து வழங்கவுள்ள புதிய நிகழ்ச்சியின் டீஸர், சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அந்த டீசரில் விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா விரைவில் உங்கள் சன் டிவியில் விரைவில் எனக் கூறுகிறார் விஷால்.
 
இவை ஜெமினி டிவியில், நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய “மேமு சதம்” நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்த நிகழ்ச்சி,  விஷால் தொகுத்து வழங்கும் இதற்கு “சன் நாம் ஒருவர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
தமிழில் முதல் எபிசோடில், சமந்தா கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக கோயம்பேட்டில் காய்கறி விற்று அந்த பணத்தை ஒரு நல்ல காரியத்துக்காக  செலவிடப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்