இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (18:42 IST)
பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, ஜி.பி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இசையமைப்பாளராக இருந்துகொண்டே நடிகர்களாகவும் ஜொலித்துக்கொண்டுள்ளனர்.

அந்தவரிசையில் தற்போது இணைந்துள்ளவர் பாலாஜி. இவர் தமிழ் சினிமாவில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி( கன்னடா) உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழில் வெளியாகி வெற்றிப் பெற்ற த்ரிஷா இல்லைனா நயன் தாரான் என்ற படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க இசையமைப்பாளர் பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் நடிகையாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு இயக்குநர் ரங்க புவனேஸ்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்