’பிக் பாஸ்’’ கண்களில் கண்ணீருடன்...ஆரி இருப்பது ஜெயிலில்…பிரபல இசையமைப்பாளர் டுவீட்

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:01 IST)
சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், ஆரி இருப்பது ஜெயிலில் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப்பொழுதுபொக்கு அம்சமாக மக்களால் பார்க்கப்படுவது பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 –ன் வெற்றியாளர் யார் என்று நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாற் ஜேம்ஸ் வசந்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து,ஆரி குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

''பிக் பாஸ்

நான் சொல்கிற அம்சத்தை நிச்சயமாக எல்லோரும் கவனித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

Freeez Task ல் எல்லோரும் fail ஆரியைத் தவிர அவரவர் குடும்பத்தினர் வரும் போதும் அவர்கள் எல்லோரும் Freez mode ல் இருந்து அவர்களாகவே ஒடிவிட்டனர். தங்கள் குடும்பத்தினரைக் கண்டு. ஆனால் ஆரி தன் குழந்தையைக் கண்டு நீர் வழிந்தோட அப்படியே அமர்ந்திருந்தார். பிக் பாக் சொல்லும் வரை.

மற்றவர் குடும்பத்தினர் வந்தபோது கூட ரம்யா, கேபி போன்றோர் அவர்களிண்ட அவர்களிடம்  சிரித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பிக் பாஸ் ரிலீஸ் என்றார்.

ஆனால் ஆரி இருப்பது ஜெயிலில் ''  எனப் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்