’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

Siva
வியாழன், 4 ஜூலை 2024 (19:01 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நடிகைக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஹரிப்பிரியா நடித்த பாரதி கண்ணம்மா என்ற சீரியல் விஜய் டிவியில் பிரபலமானது என்பதும் இந்த சீரியலில் ஹரிப்பிரியா சகோதரியாக கங்கா என்ற கேரக்டரில் நடித்த கண்மணி மனோகரன் என்பவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இவரை திருமணம் செய்ய போவது சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரியும் அஷ்வத் என்பதும் நேற்று இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இருவரது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்மணி மனோகரன் - அஷ்வத் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் புதிதாக வாழ்க்கையில் இணைய இருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்