பீஸ்ட் பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலிஸ் எப்போது?

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:00 IST)
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் தங்கள் காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டு கிளம்பியுள்ளனர். இப்போது வில்லன்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை நெல்சன் படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே தீபாவளிக்கே வெளியாக இருந்த பாடல் இப்போது புத்தாண்டு இரவன்று வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளில் இப்போது அனிருத் பிஸியாக இறங்கியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்