’எதற்கும் துணிந்தவன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:18 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் எனவும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் இமான் இசையில் ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடிய இந்த பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்