தளபதி விஜய்யின் பீஸ்ட் மற்றும் யாஷ் நடித்த கேஜிஎப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் யாஷ் நடித்தால் கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பான் இந்தியா திரைப்படமான கேஜிஎப் 2, திரைப்படம் மற்றும் பீஸ்ட் படமும் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஏதாவது ஒரு திரைப்படம் இரண்டு வாரங்கள் கழித்து திரையிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
அனேகமாக பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது