விஜய் படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ள அட்லி… என்னா ஸ்பீடு!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:40 IST)
விஜய் நடிப்பில் அட்லி விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

விஜய் அட்லி கூட்டணி தமிழ் சினிமாவின் வசூல் வேட்டைக் கூட்டணிகளுள் ஒன்றாக இருந்துவருகிறது. இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய 3 படங்களும் வெற்றி பெற்று விஜய்யின் மார்க்கெட்டை விரிவுபடுத்தின.

இதையடுத்து இப்போது அட்லி பாலிவுட்டில் ஷாருக் கான் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அவர் விஜய்யுடன் மீண்டும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் தொடங்க எப்படியும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்துக்கான கதை விவாதத்தை இப்போதே அட்லி தொடங்கியுள்ளாராம். அவர் இல்லாமலேயே அவரின் உதவியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அட்லியின் அலுவலகத்தில் இப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்