நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா-விக்னேஷ்சிவன்

Webdunia
வியாழன், 3 மே 2018 (14:58 IST)
நயன்தாரா-விக்னேஷ்சிவன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வருகிறார்கள். ஜோடியாக பலநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, தனது எதிர்கால கணவர் என்று விக்னேஷ் சிவனை குறிப்பிட்டார். இதையடுத்து, காதலர்களான இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் கலிஃபோர்னியாவில் நடைபெர்ற கோசெல்லா மியூஸிக் ஃபெஸ்டிவலில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்