சிவாகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

புதன், 4 ஏப்ரல் 2018 (15:20 IST)
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில், அவர் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். 

அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. பின்னர் நயன்தாரா மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கபோவாதாக பேசப்பட்டது.
 
இது தொடர்பாக இயக்குனர் ராஜேஷ் கூறியிருப்பதாவது:-
 
”நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. மேலும், சாய்பல்லவி நடிக்க போவதாக பரவிய தகவல் பொய்யானது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்