மதக்கலவரத்தை தூண்டுகிறதா “ருத்ர தாண்டவம்”? – தடை செய்யக் கோரி மனு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:34 IST)
இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் வெளியாகவுள்ள “ருத்ர தாண்டவம்” படத்தை தடை செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திரௌபதி பட இயக்குனர் மோகன்ஜி எழுதி, இயக்கியுள்ள படம் “ருத்ர தாண்டவம்”. இந்த படத்தில் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், மோகன்ஜி இயக்கி வெளியாகவுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் மதம் மாறிய கிறிஸ்தவர்களை இழிவுப்படுத்தும் விதமாகவும், தவறான தகவல்களுடன், மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்