கெட்ட சக்திகளை போக்கும் எலுமிச்சை பழம்...!!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (01:20 IST)
துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு எலுமிச்சை பழம் சாத்தும் போது, அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்யவேண்டும், கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்
 
ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படும், உறவுகளின் இடையில் பல  பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது, எனவே எதிர்மறை ஆற்றலை கண்டறிந்து அதை வெளியேற்ற வேண்டும்.
 
ஒரு வீட்டில் தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல் உள்ளதா என்பதை உறுதி செய்ய, மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் போதும். மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள், கருப்பு நிறத்தில் மாறினால், அதை  தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.
 
மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க  வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும். ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சை பழங்களை ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது  8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சை வைத்தால் நமது வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும். 
 
அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது,  ஒரு பச்சை எலுமிச்சையை பாக்கெட் பையில் வைத்துக் கொண்டு சென்று வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது, அது நன்கு காய்ந்திருந்தால், உங்களை  நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும். 
 
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும். இந்த  முறைகளை பின்பற்றும் போது, வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்கி வளம்பெறலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்