மாஸான ஆக்‌ஷன் காட்சிகளோடு வெளியான பாலையாவின் பகவந்த் கேசரி டிரைலர்.. இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:32 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர் பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்பட நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாலையாவின் ட்ரேட் மார்க் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களோடு வெளியாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. லியோ ரிலீஸ் ஆகும் அதேநாளில்தான் பகவந்த் கேசரி திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்