மாமன்னனால் மாவீரனுக்கு குறையும் தியேட்டர் எண்ணிக்கை!

புதன், 12 ஜூலை 2023 (09:17 IST)
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸான மாமன்னன் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீஸாகிறது. இந்த படத்தையும் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது.

இந்நிலையில் மூன்றாவது வாரத்தில் 400 திரைகளில் மாமன்னன் திரைப்படம் ஓடவேண்டும் என முடிவு செய்துள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாவீரன் திரைப்படத்தை அதற்க்கேற்றார் போல 400 திரைகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

மாமன்னன் திரைப்படத்துக்குக் கணிசமான திரைகள் ஒதுக்கப்படுவதால் மாவீரன் திரைப்படத்துக்கு வழக்கமாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு ரிலீஸ் ஆகும் அளவை விட குறைவான திரைகளே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்