ஆர்யா இல்லைனா சூர்யா:வெற்றி இயக்குனரின் கவலைக்கிடமான நிலைமை

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (19:41 IST)
இயக்குனர் பாலா இயக்கவிருக்கும் திரைப்படத்தில், ஆர்யா நடிக்க மறுத்ததால், தற்போது சூர்யாவை அணுகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சேது, பிதாமகன், நந்தா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் பாலா. இவரின் கடைசி படமான வர்மா, பிரச்சனைக்குள்ளானதால் படம் வெளிவரவில்லை.

ஆதலால் தற்போது ஒரு வெற்றிப் படத்தை இயக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது.

இதனையடுத்து இயக்குனர் பாலா, தற்போது இயக்கவிருக்கிற திரைப்படத்தில் இரண்டு கதாநாயர்கள் கொண்ட திரைப்படம் என்பதால், நடிகர் ஆர்யாவையும், நடிகர் அதர்வாவையும் அணுகியிருந்தார்.

அதர்வா எப்போது வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் ஆர்யாவோ சரியான பதில் எதுவும் அளிக்காமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பாலா, தான் இயக்கவிருக்கிற திரைப்படத்திற்கு ஆர்யாவிற்கு பதில் சூர்யாவை அணுகியிருப்பதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நடிகர் சூர்யா, “நந்தா” “பிதாமகன்” ஆகிய திரைப்படங்களுக்கு பின் மீண்டும் இணையவிருக்கும் செய்தி, சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்