கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்போது இந்த படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகியப் படங்கள் ரிலிஸாவதால் அந்தப் படங்களுக்கு முன்னதாகவே ஜூலை 19 ஆம் தேதி கைதிப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கைதியை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.