வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு செல்ல பேட் கேர்ள் படத்துக்குக் கிடைத்திருக்கும் சலுகை…!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (14:18 IST)
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா இயக்கத்தில் உருவான ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் ஒரு பதின் பருவ பெண்ணின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் சார்ந்த காட்சிகள் பலவற்றைக் காட்டியிருந்தனர். அதில் அந்த பெண் புகைப்பிடிப்பது, குடிப்பது  போன்ற காட்சிகள் இருந்ததால் கண்டனங்கள் எழுந்தன.

இந்த டீசரைப் பாராட்டிய விஜய் சேதுபதி, பா ரஞ்சித் ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் வெளியாகின. இதையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் தற்போது கருத்துகள் எழுந்தன. இதையடுத்து அந்த படத்துக்கு மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்கள் ஆதரவாகப் பேசினர். ஆனாலும் இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தை வெளிநாட்டு விருது விழாக்களுக்கு அனுப்ப சலுகை ஒன்று கிடைத்துள்ளதாம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், இந்த படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்குத் தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்