180 கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விபூதி அடித்த இயக்குனர்!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (14:03 IST)
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு ஓடிடிகள் உலகளவில் மிகப்பெரிய அளவில் சந்தையை பிடித்துள்ளன. கிட்டத்தட்ட திரையரங்குக்கு இணையான வருவாயை தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடியில் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஓடிடிகளிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக நெட்பிளிக்ஸ்தான் உள்ளது. அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய லைப்ரரிதான் காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனாலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் லாபகரமானதாக இன்னும் மாறவில்லை. அந்த நிறுவனத்துக்குப் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. ஆனாலும் உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 180 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுக்கொண்டு அமெரிக்க இயக்குனர் ஒருவர் ஏமாற்றியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம். கார்ல் எரிக் ரின்ச் என்ற இயக்குனர் ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற வெப் சீரிஸை இயக்குவதற்காக 22 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டு, அந்த சீரிஸின் ஒரு எபிசோட்டை கூட உருவாக்காமல் அந்த பணத்தை வைத்துக்கொண்டு சொகுசுக் கார் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர் மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது. அவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்