அயலான் படத்தால் 200 கோடி ரூபாய்க்கு பிஸ்னஸை தட்டி தூக்கிய வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோ!

vinoth
திங்கள், 5 பிப்ரவரி 2024 (09:44 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது. இந்த படம் 75 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் இந்த படத்தின் அதிகபட்ச பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் வி எஃப் எக்ஸ் காட்சிகள் பெரிதாக பாராட்டப்பட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மூலம் கிடைத்த பாராட்டுகள் காரணமாக அயலான் படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்ட பேந்தம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்த நான்காண்டுகளுக்கு சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதனால் முன்னணி வி எஃப் எக்ஸ் நிறுவனமாக பேந்தம் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்