அயலான் படத்தில் தயாரிப்பாளராக இணைந்த வி எஃப் எக்ஸ் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:00 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தொடங்கப்பட்ட போது சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அப்போதே படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவற்றை குறைவான தொகைக்கு விற்று விட்டார்களாம். ஆனால் அந்த உரிமைகளை இப்போது விற்றிருந்தால் பல மடங்கு அதிக தொகைக்கு விற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்டு வந்த பேந்தம் எஃப் எக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும், இப்போது ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல படத்தின் புதிய போஸ்டரில் அந்த நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்