“செக்ஸ் படம்னு நம்பி ஏமாந்துட்டாங்க” - ராய் லட்சுமி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:25 IST)
‘என் படத்தை, செக்ஸ் படம்னு நம்பி எல்லாரும் ஏமாந்துட்டாங்க’ என நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
 
தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ஜூலி 2’. ராய் லட்சுமியின் முதல் ஹிந்திப் படமான இது, அவருக்கு 50வது படமும் கூட. ஹிந்தி மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கிலும் கூட இந்தப் படம் ரிலீஸானது. ஆனால், பெரும் தோல்வி அடைந்தது. ‘ஜூலி 2’ படத்தின் போஸ்டர்ஸ், டீஸர், டிரெய்லரைப் பார்த்தவர்கள், இந்தப் படத்தில் நிறைய ஆபாசக் காட்சிகள் இருக்கும் என நினைத்தார்கள். ஆனால், படத்தில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை.“என்னுடைய படத்தை, செக்ஸ் படமென ரசிகர்கள் நினைத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்தது இல்லாததுதான் தோல்விக்கு காரணமென நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்