அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன்?

vinoth

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:18 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இதனால் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனரானார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருனாள் தாக்கூர் என பல ஹீரோயின்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டே சுமார் 600 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்