தெலுங்கு சினிமாவின் முன்னணி ஆளுமையாக இருப்பவர் தில் ராஜு. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் என பலதுறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். தமிழில் விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தைத் தயாரித்தார்.
அந்த படம் விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தில் ராஜு விஜய் பற்றி தற்போது தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “விஜய்யின் ஸ்டைலைதான் அனைத்து ஹீரோக்களும் பின்பற்றவேண்டும். அவர் ஒரு படத்துக்கு 120 நாட்கள்தான் கால்ஷீட் கொடுப்பார்.
ஆறு மாதங்கள் 20 நாட்கள் என 120 நாட்கள் கொடுப்பார். அதற்குள் நாம் படத்தை முடித்துவிட வேண்டும். இதனால் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் அழுத்தம் உண்டாகும். அது நல்லது. விஜய் ஸ்டைலில் எல்லா ஹீரோக்களும் வேலை செய்தால் அது தயாரிப்பாளருக்கு பொன்னான வாய்ப்பு. ஆனால் தெலுங்கு சினிமாவில் அதை யாரும் பின்பற்றுவதில்லை” எனக் கூறியுள்ளார்.