நடிகர் சரத்குமாருடன் இணைந்த அசோக் செல்வன் ...புதிய பட அப்டேட்

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (23:45 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன், அடுத்த படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன். இவர், பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்,  தற்போது நடித்து வரும் புதிய படம் போர் தொழில், இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மூத்த நடிகர் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடிக்கின்றனர்.

திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கவுள்ளார்.

விரைவில் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டர்  நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்