நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:47 IST)
நடிகர் சரத்குமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் சரத்குமார் விஜய்யின் அப்பாவாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐதராபாத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்க்குக்காக சென்ற நடிகர் சரத்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் சாதாரண பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், இப்போது வீடு திரும்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்