நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினமே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலும் அவர் நாளைதான் விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.