கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்த தாமதத்துக்குக் காரணம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் ஷூட்டிங் தாமதம் ஆவதுதான் என சொல்லப்படுகிறது.