பிரபல ஓடிடியில் வெளியான ஆர்யாவின் கேப்டன் திரைப்படம்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (18:06 IST)
ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியானது.

நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி  உள்ளார். இந்த படத்தில் ஆர்யாவோடு ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இமான் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் முதல் ப்ரிடேட்டர் வகை சினிமா என்ற விளம்பரத்தோடு வெளியானது இந்த திரைப்படம்.

ஆனால் ரிலீஸுக்கு பின்னர் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் பிரிடேட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கேப்டன் திரைப்படம் ஜி 5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்