68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:35 IST)
தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாட்டில் கலைத்துறைக்கான, 68வது  தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி   மத்திய அரசு அறிவித்தது.

இதில், தமிழ் சினிமாவில், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதில்,

சிறந்த படம் - 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்

 சிறந்த நடிகர்: சூர்யா

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி

சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ்

சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா

ஆகிய விருதுகளை தட்டிச் சென்றது. இதனால்,சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த  நிலையில், 68 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடக்கிறது. இதில், கலந்துகொள்வதற்காக, நடிகர் சூர்யா, அவரது தந்தை, சிவகுமார் மற்றும் சூர்யாவின் பிள்ளைகளான தியா, தேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்