இணையத்தில் வைரலாகும் அருவி அதிதி பாலனின் புதிய பாடல் வீடியோ!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:05 IST)
அருவிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகை அதிதி பாலனின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.

அருன் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவிப் படம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதில் அருவிக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் ஒரே படத்தில் உச்சப் புகழை அடைந்தார். அதன் பின் பல படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் வலுவானக் கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்து வந்தார்.

இதையடுத்து தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு ஆல்பம் பாடல் வீடியோவில் நடித்துள்ளார் அதிதி. FLAWS என்ற அந்த புதிய பாடல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல் வீடியோ.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்