அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:31 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார். இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.  

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் கோவாவில் நடக்கவிருக்கும், நிலையில் இப்போது படக்குழு அங்கே முகாமிட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்