அருள்நிதியின் அடுத்த காப் தில்லர் - வெளியானது அப்டேட்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:02 IST)
நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

 
ஜீவா, அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து பிப்ரவரி 5ம் தேதி வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த படத்தை தொடர்ந்து அருள்நிதி அடுத்து ஒரு தில்லர் படத்தில் காவலராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
ஆம், ஈரம், குற்றம் 23 திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன், இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி. 
 
இந்த படத்திற்கு டைரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்