விக்ரம் படத்தில் சூர்யாவை அடுத்து மற்றொரு பிரபல நடிகர்… லோகேஷ் பகிர்ந்த ரகசியம்

Webdunia
திங்கள், 30 மே 2022 (13:34 IST)
விக்ரம் படத்தில் சூர்யா ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதைப் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்தியாவின் பல நகரங்களுக்கும், துபாய் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று கமல் படத்துக்கான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் படத்தில் அவரின் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த தகவலை நடிகர் அர்ஜுன் தாஸூம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்