விஜய்க்கு ஓகேன்னா.. நான் தயார்! – ஆச்சர்ய அறிவிப்பு வெளியிட்ட கமல்ஹாசன்!

திங்கள், 30 மே 2022 (11:32 IST)
விக்ரம் 3வது பாகத்தில் நடிகர் விஜய்யை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் அளித்துள்ள பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவுகளும் தொடர்ந்து விருவிருப்பாக நடந்து வருகிறது.

விக்ரம் படத்திற்காக மலேசியாவில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், விக்ரம் மூன்றாம் பாகத்தில் விஜய் நடிப்பாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “விக்ரம் 3 படத்திற்காக ஏற்கனவே ஒருவரை ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஆனால் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்