நம்ம ராம் wanted-ஆ… லைஃப் டைம் செட்டில்மெண்டாம்... பஞ்சதந்திரம் குழுவின் விக்ரம் ப்ரோமோ!

வெள்ளி, 27 மே 2022 (18:17 IST)
விக்ரம் திரைப்படத்துக்காக வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அதையடுத்து கமலின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பஞ்சதந்திரம் படத்தில் கமலோடு நடித்த ஸ்ரீமன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த் மற்றும் யூகி சேது ஆகியோர் படத்தின் பிரபல காட்சியான கான்பெரன்ஸ் கால் பேசும் காட்சியை ரி கிரியேட் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anirudh (@anirudhofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்