மாநாடு’ படத்தில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (19:32 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப் ஆகும் நிலைக்கு வந்தது
 
இதனை அடுத்து மீண்டும் சிம்புவுடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஜனவரி மாத இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில்  இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் நடித்த ’புலி’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அவர் மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அரவிந்தசாமியை அணுகியதாகவும், அரவிந்த்சாமி கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. எனவே மாநாடு படத்தின் வில்லன் அரவிந்த்சாமி தான் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என்று தெரிகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கி விட்டதாகவும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் தற்போது பாடல் கம்போஸிங்கில் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்