ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் கலெக்‌ஷனை தாண்டிய அரண்மனை 4!

vinoth

ஞாயிறு, 12 மே 2024 (07:58 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் வாரத்தில் இந்த படம் வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டி வெற்றிகரமாக சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாரம் புதுப்படங்கள் ரிலீஸான போதும் அரண்மனை-4 படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்