’அரண்மனை 4’ வசூலை மிஞ்சியதா ‘ஸ்டார்’ முதல் நாள் வசூல்?

Siva

சனி, 11 மே 2024 (08:06 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் நன்றாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

முன்பதிவிலேயே நல்ல வசூல் கிடைத்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 3 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் இந்த படத்திற்கு மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் இந்த வசூலை கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம் வசூல் செய்ய வாய்ப்பு குறைவுதான் என்றும் கூறப்படுகிறது

‘ஸ்டார்’  திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மூன்று கோடி மட்டுமே வசூல் செய்து உள்ள நிலையில் ’டாடா’ படத்தை விட அதிகமாக வசூல் செய்தாலும் அரண்மனை 4 அளவுக்கு வசூலை மிஞ்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்