ஆண்ட்ரியா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய ‘மனுஷி’ படத்துக்கு சென்சாரில் சிக்கல்?

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (09:49 IST)
நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றும் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குனர் கோபி.

இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்த கதையாக இந்த படத்தை கோபி உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்குள்ள அதிகாரிகள் பல காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படக்குழு படத்தை மறுசென்சாருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்