தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு அரேபிய மொழி பாடல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
இந்த படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் ஒன்று தமிழ் மற்றும் அரபி மொழி கலந்து இருப்பதாகவும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின்போது படமாக்கப்பட்டதாகவும் இந்த பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே குழுவினர் நடனம் ஆடியதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது
முதல்முறையாக தமிழ் திரைப்படம் ஒன்றில் அரேபிய மொழியில் பாடல் இடம் பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விரைவில் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அனேகமாக தீபாவளி அன்று இந்த பாடல் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது