பாலிவுட் சூப்பர் ஸ்டாரோடு இசைப்புயல் …. A R ரஹ்மான் மகன் பகிர்ந்த வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (11:09 IST)
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் இருந்து ஷாருக் கான் மட்டும் வந்து திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது அவரோடு கோலிவுட் பிரபலங்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அதைப் பதிவேற்றி வந்தனர்.

அந்த வகையில் இருபெரும் சாதனையாளர்களும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றி மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்தவர்களுமான ரஹ்மானும், ஷாருக் கானும் இந்த திருமணத்தில் சந்தித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அதை இப்போது ரஹ்மானின் மகன் அமீன் இணையத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்