த்ரிஷா, நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் அம்மன் கெட்டப்…!

vinoth

புதன், 31 ஜூலை 2024 (09:52 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவரின் இறுதி ஹிட் படமான பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவர் தமிழில் தனக்கு ரி எண்ட்ரி தரும் விதமாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் அவர் அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் மாசாணி அம்மன் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்