மூக்குத்தி அம்மன் 2… ஆர் ஜே பாலாஜிக்கும் ஐசரி கணேஷுக்கும் என்ன பிரச்சனை?

vinoth

புதன், 17 ஜூலை 2024 (10:07 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் இயக்குனர் உள்ளிட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சம்மந்தமாக ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு இடையே சம்பளம் சம்மந்தமாக எழுந்த கருத்துவேறுபாடுதான் இப்படி இரண்டு பேரும் தனித்தனியாக இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கக் காரணம் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்