ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பது, கூழ் காய்ச்சுவது, விரதம் இருப்பது உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் மாதமாகவே நம் முன்னோர்கள் முதல் கொண்டாடி வருகின்றனர்.
ஆடி மாத பிறப்பு முதல் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி முதல் தேதி தொடங்கி தை மாதம் மகரசாந்தி வரை பல்வேறு வழிபாடுகள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது ஆண்டாண்டு காலமாக உள்ள வழக்கமாக உள்ளது. எனவே ஆடி மாதத்தில் அம்மனை துதித்து மகிழ்வோம்