மலையாள சினிமாவிலும் நடிகராக கால்பதிக்கும் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (07:48 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொகபத்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அவரின் ஆரம்பகால படங்கள் பெற்ற வரவேற்பை இப்போதுள்ள படங்கள் பெறுவதில்லை. ஆனாலும் அவை வெளிநாட்டு சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அனுராக் காஷ்யப் நடிகர் அவதாரம் எடுத்து பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்த அவர் இப்போது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அனுராக் காஷ்யப் மலையாள சினிமாவிலும் நடிகராக காலடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆஷிக் அபு இயக்கத்தில் சௌபின் சாஹிர் மற்றும் திலேஷ் போத்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படமான ’ரைபிள் கிளப்’ என்ற படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்