சினிமா பண்டி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. கவனம் ஈர்த்த முதல் லுக்!

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (11:12 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் சர்ச்சைகளை உருவாக்கி 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இதையடுத்து இப்போது அனுபமா நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலிஸ் ஆகி கவனம் ஈர்த்துள்ளது. சினிமா பண்டி என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரவீன் கந்த்ரகுலே  பரதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. தெயவசிலை ஒன்றின் வழிபாட்டில் தொடங்கும் வீடியோ, பெண்கள் முக்காடிட்டு கூட்டமாக நிற்கும் ஒரு இடத்தில் முடிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்