இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த கொடி, ஜெயம் ரவி நடித்த சைரன் உள்ளிட்ட படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.