இப்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் படத்தின் கதாநாயகன் சித்துவோடு படு ரொமாண்டிக்கான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான போஸ்டர் ஒன்றில் அனுபமாவின் கைகள் சித்துவின் இடுப்புக்கு கீழே இருப்பது போல இருந்தது. இதனால் இந்த படத்தின் மீது ஆபாசப் படம் என்ற முத்திரை விழுந்தது.